திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். அவருடைய மகள்களும் திரைத்துறையில் நடிகைகளாக விளங்குபவர்கள்தான் . இவருடைய மகள்கள் கவிதா, வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என அனைவருமே திரைத்துறையில் நடிகைகளாக வலம் வந்துள்ளனர்.
விஜயகுமாருக்கு, திரைத்துறையில் நடிக்காத ஒரு மகளும் உள்ளார். அவர்தான் அனிதா விஜயகுமார். இதில் அனிதா, கவிதா, அருண் விஜய் இவர்கள் மூவரும் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள். இதேபோல் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூவரும் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியும் மறைந்த பழம்பெரும் நடிகையுமான மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள். இதில் அனிதாவின் மகள் தியா முகத்தை பலரும் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. அவர் லண்டனில் மருத்துவம் பயின்று வருகிறார்.
இதுபற்றி பிஹைண்ட்வுட்ஸிற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள அனிதா, “நான் தான் வீட்ல ரொம்ப அடிவாங்குவேன். அக்கா சைலண்ட்டா செய்றத செஞ்சிட்டு போயிடுவா. ஒருமுறை 7 வயதில் அருண் விஜய் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் நடந்த ஒரு சிறிய சண்டையில் அருண் விஜய் ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நான் அப்பாவிடம் காயத்தை காட்டுவதற்காக வீக்கம் ஆறிவிடாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்பா விஜயகுமார் வந்த பிறகு நாங்கள் சகோதரிகள் அனைவரும் கதவை தட்ட அருண் கதவைத் திறக்காமல் இருந்திருக்கிறார். பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால் ஏசி ரிப்பெயருக்கு போனதால், அந்த இடத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த அட்டையை எடுத்து விட்டு அந்த துளை வழியாக அருண்விஜய் வீட்டை விட்டு வெளியேறி சென்று பக்கத்து தெருவில் அமர்ந்திருந்திருக்கிறார். எங்கள் உறவினர் ஒருவர் சென்று அவரை அழைத்து வந்தார். இது மறக்க முடியாத சம்பவமாக இருந்தது” என குறிப்பிடுகிறார்.
இதேபோல், தியா பேசும்போது, “அருண் மாமா நிறைய சொல்லுவார். நான் எதையும் அம்மா கிட்ட மறைப்பதில்லை. அருண் மாமா எங்காவது வெளியே சென்றால் கூட வீட்டுக்கு ஏதேனும் வாங்கி வரவேண்டும் என்பதை தான் முதலில் நினைப்பார். அவர் வெளியே சென்றால் நிறைய ஷாப்பிங் செய்யக்கூடிய பழக்கமுடையவர். அப்படி சென்றால் அன்புடன் வீட்டுக்காக யாருக்கு என்ன தேவை என்பதை வாங்கி வருவார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இவர்களின் முழு பேட்டியை வீடியோவில் காணலாம்.