www.garudavega.com

“CM ஆயிருப்பாரு!.. நாங்க சேர்ந்து TRAVEL பண்ணிருந்தா”... விஜயகாந்த் பிறந்த நாளில் பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் விஜயகாந்தை நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

vijayakanth would have become CM actor விஜயகாந்த்

அதன்படி விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் அவருடன் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றிய மன்சூர் அலிகான். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் இந்த பிறந்த நாள், ஏழை எளியவர்களின் மற்றும் பாமர மக்களின் பிறந்த நாளாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

கேப்டன் அவர்கள் பிரபலமாக நடித்துக்கொண்டிருந்த சமயத்திலும், அதற்கு முன்பிருந்தும் என்னுடன் பழகிய ஆள். சினிமாவில் வேலை கேட்டு பல உதவி இயக்குனர்கள் கஷ்டப்படும்போது, அவர்களெல்லாம் ராஜா பகதூர் சாலையில் இருக்கும் அவருடைய அலுவலகம் சென்று உணவு சாப்பிடுவது உண்டு. என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான கலைஞர்களை உருவாக்கிய மாபெரும் கலைஞன் சினிமாவில் நடிப்பவர்கள் இருந்து விட்டு போவார்கள்.

வெறும் கதாநாயகிகளை மட்டுமே அறிமுகப்படுத்துவார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படியில்லை. பல தொழில்நுட்ப கலைஞர்கள்.. குறிப்பாக சண்டைப் பயிற்சியாளர்கள், நடன இயக்குனர்கள் எனப் பல கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தனி பாணி இருப்பதுபோல் எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா போன்றோரின் பாதிப்பு எதுவும் இல்லாமல், தனக்கென்று தனி பாணியை உருவாக்கி சினிமாவில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த். அதற்கான அடிப்படைக் காரணம், அவருடைய இனிய நண்பரும் ஆசிரியருமான இப்ராகிம் ராவுத்தர்.

அதே சமயம் அவருடைய அரசியல் பயணத்தில், நான் பயணிக்க முடியாமல் போய்விட்டது; அதற்காக நான் வருந்துகிறேன். விஜயகாந்த் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார். நீடூழி வாழ்வார். என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அவர் செய்த சேவைகளுக்கும் நல்கிருபைகளுக்கும் ஆண்டவர் அவருக்கு நீண்ட ஆயுளை தருவார்.

vijayakanth would have become CM actor விஜயகாந்த்

ஒருவேளை கேப்டனுடன் நானும், கேப்டன் படங்களுக்கு வசனங்களை எழுதியவருமான லியாகத் அலிகானும் அவருடன் அரசியலில் இணைந்து பயணித்திருந்தால் அவர் இன்று முதலைமைச்சராகக் கூட ஆகியிருக்கலாம். லியாகத் அலிகான் விஜயகாந்த் படங்களுக்கு எழுதிய வசனங்கள் மின்சாரம் உடலில் பாய்வது போல இருக்கும். ஆனால் பயணிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேம். இது என்னுடைய மமதையாக கூட இருக்கலாம், பரவாயில்லை, நல்லதே நடக்கும் என இனிமேல் என்று நம்புவோம்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: கொந்தளித்த ஏஞ்சலினா ஜோலி.. ஆரம்பிச்சு 5 மணி நேரத்துல #Instagram-ல் ரெக்கார்டு பிரேக்கிங் followers!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijayakanth would have become CM actor விஜயகாந்த்

People looking for online information on Captain Vijayakanth, DMDK, Mansoor ali khan, Vijayakanth will find this news story useful.