அண்மையில் ஏற்காட்டில் நடைபெற்று வந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் விஷ்வாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிரபுதேவா நடிக்கும் பஹிரா.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்.. ரன்னிங் டைம் விவரம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் அபி சரவணன். தற்போது விஜய் விஷ்வா என்று பெயர் மாற்றிக் கொண்டு நடித்துவரும் நடிகர் விஜய் விஷ்வா, பல தமிழ் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபடுவார்.
பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட பல படங்களில் நடித்த விஜய் விஷ்வா அண்மையில் ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் மும்முரமாக நடைபெற்று வந்தது. அங்கு அவர் பங்கு பெற்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதில் பைக்கில் இருந்து தாவிக் குதிக்கும்படியான சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. இதில் டூப் இன்றி, தானே ரிஸ்க் எடுத்து நடிப்பதாக நடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது பைக்கில் இருந்து கீழே விழும்போது நடந்த எதிர்பாராத விபத்தில் நடிகர் விஜய் விஷ்வாவின் வலது கை முறிந்தது. இதனால் வலியால் துடித்து அந்த இடத்திலேயே விஜய் விஷ்வா விழுந்து அலறினார். இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பாகி வந்தன. இந்த நிலையில் வலியால் துடித்த நடிகர் விஜய் விஷ்வாவை படக்குழுவினர் மீட்டு சேலம் ஐந்து ரோடு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர. தற்போது அந்த மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டு இருக்கும் நடிகர் விஜய் விஷ்வா, தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் நலம்பெற்று மீண்டும் படப்பிடிப்புக்கு ஓரிரு மாதங்களில் திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தவுடன் தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அன்பே சிவம் ! பிராத்தனைகளுக்கு நன்றி… நலம் @VijayVishwaOffi @everyone pic.twitter.com/bP6220AVKw
— Vijay Vishwa (@VijayVishwaOffi) February 26, 2023
Also Read | BREAKING: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்'.. ரிலீஸ் எப்போ?