#BREAKING - விஜய்யின் மாஸ்டர் : ஜேம்ஸ் துரைராஜுக்கு ஒரு குத்து... அப்போ பவானிக்கு..?! தெறி EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் குறித்த பிரத்யேகமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டரில் இருக்கும் செம பாடல் | Vijay Vijay Sethupathi anirudh's master movie's exclusive song details is out.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஒரு பாடலை பற்றி பிரத்யேகமான தகவல் தெரிய வந்துள்ளது. இந்த பாடல் விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் பவானி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்காக, சோலோ பாடலாக இது உருவாகியுள்ளதாக நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி கதை மற்றும் வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் வெளியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டரில் இருக்கும் செம பாடல் | Vijay Vijay Sethupathi anirudh's master movie's exclusive song details is out.

People looking for online information on , Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.