நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
Also Read | "நாள் நெருங்க நெருங்க".. "எரிமலை எப்படி பொறுக்கும்".. Freeze ஆகி நின்ற ரச்சிதா?.. ADKவின் கமெண்ட் 😅!!
இந்த படத்தின் போஸ்டர்கள் & 3 சிங்கிள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
துணிவு படம், இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. துணிவு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் வெளியான துணிவு படத்தின் டிரெய்லரும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. விரைவில் 50 மில்லியன் பார்வையாளர்களை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துணிவு படத்தின் டிரெய்லர் 44 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பின்னர் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் எடிட்டிங் டைம்லைனை பகிர்ந்துள்ளார். பிரிமியர் ப்ரோ மென்பொருள் மூலம் துணிவு படத்தின் டிரெய்லர் எடிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | EXCLUSIVE: லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன்?.. உத்தமவில்லனுக்காக மீண்டும் ஒரு புதிய படம்!