KAAPAN USA OTHERS

“அடிவாங்கினாலும் கோப்பை எனக்கு தான்..”- கவினுக்கு முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சொன்ன பஞ்ச்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள் இந்த வாரம் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து வருகின்றனர்.

Vijay TV Title Winner Riythvika Janani Bigg Boss 3 Promo 2

பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறியதையடுத்து, ஐவர் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிக் பாஸ் 2வது சீசன் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா, பிக் பாஸின் அறிவுரையின் பேரில் சில டாஸ்குகளை கொடுத்தனர்.

அதையடுத்து, இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் சீசன் 2-வின் டைட்டில் வின்னரான ரித்விகாவும், மற்றொரு போட்டியாளரான ஜனனி ஐயரும் எண்ட்ரி கொடுத்தனர்.

அப்போது பேசிய ஜனனி, இந்த சீசன் ஒவ்வொருவரும் யுனிக்காக இருப்பதாக கூறினார். அதனை விளக்குமாறு மன்னன் டாஸ்கில் இருக்கும் தர்ஷன் கேட்டுக் கொண்டதையடுத்து, ‘தர்ஷன் ஆரம்பம்  முதலே ஒரே கோலில் இருக்கிறார். நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை’. கவின், ‘அடி வாங்கினாலும் கோப்பை எனக்கு தான் என்ற ரேஞ்சில் விளையாடி வருகிறார். ‘உங்க கதைல ஹீரோவும் நீங்க தான் வில்லனும் நீங்க தான்’ என கவினை பாராட்டி புகழ்ந்தார்.

இதேபோல், சாண்டி, ஷெரின், முகென், லாஸ்லியாவுக்கு என்ன சொன்னார்கள் என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.

“அடிவாங்கினாலும் கோப்பை எனக்கு தான்..”- கவினுக்கு முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சொன்ன பஞ்ச்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Title Winner Riythvika Janani Bigg Boss 3 Promo 2

People looking for online information on Bigg Boss Tamil 3, Janani Iyer, Kavin, Promo 2, Riythvika will find this news story useful.