ASURAN USA OTHERS

“இந்த ஜென்மத்துல நீ..” - முகென் குறித்து ரேஷ்மா EMOTIONAL SPEECH - புரோமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான டாஸ்குகள் விறுவிறுப்பாக செல்கின்றன.

Vijay TV Reshma Mugen shares love Bigg Boss Tamil 3 Promo 2

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தர்ஷனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக  ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் எவிக்‌ஷனுக்கு தர்ஷன் நாமினேட் செய்யப்பட்டார். மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாய்ப்புகளை பெற்று பிக் பாஸ் போட்டியில் இருந்து தர்ஷன் வெளியேறினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிகான புரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. முதல் புரொமோவில், பிக் பாஸ் 3-ல் இருந்து ஏற்கனவே வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்தியா, ஃபாத்திமா பாபு உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எண்ட்ரி கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில், ரேஷ்மா முகென் குறித்தும், அவர் அன்பிற்காக ஏங்குவது குறித்தும் பேசினார். அப்போது, “இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது. அன்பு இல்லாத உலகமே கிடையாது. நீ வெளியில வந்தா தெரியும் உனக்கு எவ்ளோ அன்பு இருக்குனு. நீ நீயாவே இரு” என கூறினார்.

“இந்த ஜென்மத்துல நீ..” - முகென் குறித்து ரேஷ்மா EMOTIONAL SPEECH - புரோமோ வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Reshma Mugen shares love Bigg Boss Tamil 3 Promo 2

People looking for online information on Bigg Boss Tamil 3, Mugen Rao, Promo 2, Reshma will find this news story useful.