Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

ஆரம்ப காலத்தில் புகழுக்கு கூடவே இருந்து உதவி செய்த அவரது அண்ணனை பார்த்து இருக்கீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

vijay tv pugazh with his brother photo விஜய் டிவி புகழின் அண்ணன் புகைப்படம்

இந்நிலையில் நடிகர் புகழுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றனர். தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் மற்றும் குக் வித் கோமாளி ஷுட்டிங் என்று புகழ் படு பிஸியாக வளம் வருகிறார். ஆனால் புகழ் அத்தனை சுலபமாக இந்த இடத்தை அடைந்து விடவில்லை ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு விஜய்டிவி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் புகழ் தனது யுடியூப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் புதியதாக விலையுயர்ந்த கார் ஒன்றை வழங்கியுள்ளார். இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது அவரது அண்ணன் தான். சென்னையில் இருவரும் வேலை செய்தபோது பல கஷ்டங்களை அனுபவித்து தான், இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர் என்று புகழ் அடிக்கடி பேட்டிகளில் கூறுவதுண்டு. இந்நிலையில் பலரும் அவரது அண்ணனை பார்த்ததில்லை. அவரது திருமணத்தின்போது புகழ் வெளியிட்ட புகைப்படம் இதோ..!

Tags : Pugazh

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh with his brother photo விஜய் டிவி புகழின் அண்ணன் புகைப்படம்

People looking for online information on Pugazh will find this news story useful.