விஜய் டிவி 10 பிப்ரவரி 2022: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இந்த அண்ணன் தம்பிகள் கட்டியெழுப்பியிருக்கும் புதிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறப்பதற்கு தற்போது அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளதால் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் போராடி வருகின்றனர்.
அதிகாரிகள் மறுப்பு..
இந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்று ஈ.ஓ அதிகாரியிடம் சென்று மூர்த்தியும், அவரது தம்பி ஜீவாவும் விசாரிக்க, அவரோ, தன் மகனை பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்னன் தம்பிகள் அடித்துவிட்டதாகக் கூறி அதிரவைத்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் கையெழுத்து போட வேண்டும்.
Also Read: போடு சக்க.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்காக வைரல் ஆகும் #வடிவேலு-வின் புதிய கெட்டப்..
தெரியவந்த உண்மை..
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததற்கு உண்மையான காரணம், ஈ.ஓ அதிகாரியின் மகனுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் கடைசி தம்பி கண்ணனுக்குமான பிரச்சனையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரரான கதிர், ஈ.ஓ அதிகாரியின் மகனை அடித்துவிட்டதுதான். இந்த விஷயம் அலுவலகம் சென்ற மூர்த்தி மற்றும் ஜீவா இருவருக்கும் தெரியவர, அதே சமயத்தில் இதே உண்மையை வீட்டாரிடம், கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் சொல்லிவிட்டார்.
தர்ணாவில் ஈடுபட்ட மூர்த்தி..
ஆனால், மூர்த்தியோ, ஈ.ஓ அதிகாரியின் மகனை அடித்ததற்கு பதிலாக, அவரிடம் இருந்து, தான் அடிவாங்க தயார் என்றும், அதேசமயம் கடையை மூடுவதற்கு விடமாட்டோம் என சொல்லி, அந்த ஆபீஸ் முன்பாக உட்கார்ந்து மூர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். தம்பி ஜூவா, மற்றும் மாமா யார் அழைத்தும் எழவில்லை. வரவில்லை.
பின்னர் இதை கேள்விப்பட்ட மூர்த்தியின் மனைவி தனம் கைக்குழந்தையுடன், தானும் வந்து தர்ணாவில் அமர, பின்னர் மொத்தம் குடும்பமும் அந்த அரசு அலுவலகம் முன்பாக அமர்ந்து கடையை திறக்கும் வரை எழமாட்டோம் என சொல்லி தர்ணா எனும் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்க்கியுள்ளனர்.