விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகரான ரசிகர்கள் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் உள்ளனர்.
எனினும் காமெடி நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உள்ளது. காரணம் சீரியல்களில் கதைகள் பல விதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் படியாக காட்சிப்படுத்தப்பட வேண்டி உள்ளது. ஆனால் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு காமெடி மட்டும் தான் இலக்கு என்பதால் அவை நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கின்றன.
இந்த நிலையில் தான் விஜய் டிவியில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் காமெடி ஸ்டார்கள் இணைந்து கலக்கும் புதிய நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி எனும் புத்தம் புது ஷோவின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து விஜய் டிவியில் வெளியாகி வைரலாகி வருகின்றன. முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் முடிவடைந்த நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசனையும், பிக்பாஸ் 5வது சீசனையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தா வந்துருச்சுல இன்னொரு stress buster show! 😀#ComedyRajaKalakkalRani - ஜூன் 27 முதல் ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CRKR #VijayTelevision pic.twitter.com/1Q3ilyoEww
— Vijay Television (@vijaytelevision) June 16, 2021
இந்த நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு, சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் பங்கேற்பதால், நிச்சயமாக குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளுக்கு பிறகு இன்னொரு பெரும் Stress Buster நிகழ்ச்சியாக இதுவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.