www.garudavega.com

கப்பல்ல ஹனிமூன் ரவுண்டா..? பட்டையை கிளப்பும் MR & MRS சின்னத்திரை.. என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளுள், சின்னத்திரையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி பலரையும் கவர்ந்திருக்கிறது.

vijay tv Mr Mrs Chinnathirai honey moon round in ship

Also Read | VIDEO: அருள் நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மிரட்டல் டிரெய்லர்.. வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!

இதுவரை நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் விஜய் டிவியின் சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர்கள், இதேபோல் விஜய் டிவியில் காமெடியில் கலக்கக்கூடிய நடிகர்கள் பங்கேற்று இருந்ததை காண முடிந்தது.

சில நிகழ்ச்சிகளில் சின்னத்திரை நடிகர்கள் தங்களுடைய இணையருடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு டாஸ்குகளிலும் ஈடுபட்டு அனைவரையும் கவர்ந்தனர். ஆட்டம், பாட்டம் என அவர்களுக்கிடையே நிகழும் போட்டிகள் இறுதியில் எந்த ஜோடி சிறந்த ஜோடி என்று தீர்மானிக்கும் அளவுக்கு நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்லும்.

vijay tv Mr Mrs Chinnathirai honey moon round in ship

இந்த நிகழ்ச்சி வரும் சனி மாலை 6.30 மணி மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமான இன்னொரு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த Mr & Mrs சின்னத்திரை சீசன் 4-ல் கல்யாண தேன் நிலா சுற்று என்கிற புதிய சுற்று கொண்டு வந்திருக்கிறார்கள் .

vijay tv Mr Mrs Chinnathirai honey moon round in ship

அதன்படி கப்பலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ப்ரோமோ காட்டப்படுகிறது. பார்ப்பதற்கு டைட்டானிக் கப்பல் போல் இருக்கும் இந்த கப்பலில் கிட்டத்தட்ட சின்னத்திரையில் இப்படியான ஒரு நிகழ்ச்சி அரிதாக நடைபெறுகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay tv Mr Mrs Chinnathirai honey moon round in ship

Also Read | "ஆஹா.. இது செம technique -ஆ இருக்கே.?" - ஆனா வொர்க் அவுட் ஆகாம போச்சுனா.. உஷாராவும் இருக்கணும்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv Mr Mrs Chinnathirai honey moon round in ship

People looking for online information on Honey moon round, Mr Mrs Chinnathirai, Vijay Television, Vijay tv will find this news story useful.