www.garudavega.com

"இவங்க 2 பேரும் நம்ம லிஸ்ட்லயே இல்லயே?".. வெறித்தனமாக வெளியான #BIGGBOSSJODIGAL புரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்திருக்கிறது.

Vijay Tv BiggBoss Jodigal Ramyakrishnan and Nakul viral Promo

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி மூலம் உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் பலரும் மிகப்பெரிய சினிமா வாய்ப்புகளுடன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்திவிகா வெற்றி பெற்றார். மூன்றாவது சீசனில் முகின் ராவ் வெற்றி பெற்றார். நான்காவது சீசனில் ஆரி டைட்டில் கார்டு வென்றார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிந்ததால், 5 வது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆர்வமாக உள்ளனர்.

இதனிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று பேச்சுகள் எழுந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்யவிருக்கும் கலாட்டாவும் அட்ராசிட்டிகளும்தான் இந்த நிகழ்ச்சி என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் நடனம் ஆடி அனைவரையும் அறிமுகப் படுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ஜோடிகள் யாரென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் இந்த நிகழ்ச்சியில் தோன்றியிருக்கின்றனர். இவர்களை பார்த்து, ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?’ என சாண்டி மாஸ்டர் கூறுகிறார். அத்துடன் இந்த புரோமோ நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சி வரும், மே 2 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ALSO READ: கண்டிப்பு காட்டும் லால் ஏட்டன்!.. வெளியேறிய மணிக்குட்டன்!.. மீண்டும் நடந்த மிராக்கிள்.. BB3 Viral Promo!

"இவங்க 2 பேரும் நம்ம லிஸ்ட்லயே இல்லயே?".. வெறித்தனமாக வெளியான #BIGGBOSSJODIGAL புரோமோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Tv BiggBoss Jodigal Ramyakrishnan and Nakul viral Promo

People looking for online information on BBJodigal, BiggBossJodigal, Biggbosstamil, Trending, Vijay Television will find this news story useful.