சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.
Also Read | ”ஆக்ஷன் படம் எடுக்க class எடுத்திருக்கிறார்”… சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் செம்ம review!
சிக்கலான time loop… எளிமையாக சொன்ன வெங்கட் பிரபு…
2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க, V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய் ஜி மகேந்திரா மற்றும் எஸ் ஏ சந்திரசேகர்ன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Time Loop பாணியில் அமைந்த மாநாடு படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையும், வில்லன்களால் நீதிக்கு துரோகம் செய்து, அழிவுச் செயல்களில் ஈடுபடும் போது, பிரபஞ்ச விதிகள் எப்படி உடைந்து போகின்றன என்பதே மாநாடு கதை. அதைக் கொஞ்சம் கூட குழப்பமே இல்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் புரியும் படி சிறப்பாக திரைக்கதை அமைத்து உருவாக்கி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.
வெற்றிகரமான 100 ஆவது நாள்…
சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பால் இந்த படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பசினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் எனப் பலரும் படத்தைப் பாராட்டினர். ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது. சென்னை ரோகினி திரையரங்கில் மாநாடு திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. இதையடுத்து மாநாடு படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தொலைக்காட்சி பிரீமியர்…
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் பற்றிய சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றியுள்ள விஜய் தொலைக்காட்சி விரைவில் விஜய் தொலைக்காட்சியில் இந்த படத்தை பிரீமியர் செய்ய உள்ளது. அது சம்மந்தமான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அனேகமாக வரும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் மாநாடு ஒளிபரப்பப் படலாம் என சொல்லப்படுகிறது.
Also Read | செம்ம... சர்வதேச இசைக்கலைஞர்களின் சங்கமம்… ரஹ்மானின் maajja நடத்தும் ‘யாழ்’ இசைத் திருவிழா