விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீடியோக்களும் புகைப்படங்களும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறியப்படும் பிரபல விஜே பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். முன்னதாக சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான பிரியங்கா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , அவருக்கே உரிய பாணியில் மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.
அதன்பின்னர் பிரியங்காஎன்றாலே பாசிடிவாகவும் கலகலப்பாகவும் ஒரு நிகழ்ச்சியை எடுத்துச் செல்லும் பாங்குடைய தொகுப்பாளினி என்கிற பெயர் அவருக்கு கிடைத்தது. சூப்பர் சிங்கர் ,ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா திடீரென மருத்துமனையில் இருக்கும்படியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தமது யூடியூபில் தனக்கு என்ன ஆனது என விளக்கமும் வெளியிட்டிருந்தார்.
அதில் தனக்கு உணவு ஒத்துக் கொள்ளாததால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் ஏப்ரல் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும் இது போன்ற ஒரு விஷயம் நடந்தால் தான் மிகவும் சோர்வாக உணர்ந்து விடுவதாகவும் அதனால் ரசிகர்களுடன் தொடர்ந்து இணையதளம் வாயிலாக பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் மருத்துமனையில் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் தனக்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை படுக்கை பார்ப்பதற்கு விமானத்தில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பயணம் செய்யும் சீட் போல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தன்னால் இரவு தூங்க முடியவில்லை என்றும் அதற்காக தனக்கு தானே எண்டர்டெயின் செய்து ஊக்குவித்து கொள்வதாகவும் இதே போல் ஒவ்வொருவரும் கஷ்டம் வரும்போது தங்களுக்குத் தாங்களே ஊக்குவித்துக் கொண்டு மீண்டும் வரும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பிரியங்கா தனக்காக வேண்டி கொள்ளுமாறும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மீண்டு வந்து மீண்டும் கலக்குங்க பிரியங்கா!