www.garudavega.com
My India Party

சித்ராவின் திடீர் மரணம்... "இது 100% தற்கொலை இல்ல, காரணம்"... அடித்து சொல்லும் நடிகர் அசீம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

vijay tv actor azeem on chitra death சித்ராவின் மரணம் அடித்து சொல்லும் நடிகர் அசீம்

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி விஜய் டிவி நடிகர் அசீம் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறும்போது "சித்ரா தற்கொலை செய்யும் பெண் அல்ல. அவர் மிகவும் தைரியமான பெண். மேலும் அவரது முகத்திலும் தாடையிலும் இருந்த காயங்கள் எதனால் உண்டானது என்பதை நாம் விசாரணை செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரியின் பேட்டியில் கூட இது தற்கொலை போன்று தெரியவில்லை என்றே கூறுகின்றனர்"

"எனவே எனக்கு காவல்துறை மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. தீவிரமாக விசாரித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். சுஷாந்த் சிங் மரணம் அடைந்த போது கூட 'தற்கொலை எதற்கும் தீர்வும் இல்லை' என்று சித்ரா பதிவிட்டிருந்தார். அப்படி இருக்கையில் அவர் இப்படி செய்வதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. மேலும் அவர் தனது குடும்பத்தை முன்னேற்றுவதற்காக இரவும் பகலும் அயராது உழைத்தவர். அப்படி லட்சியம் கொண்ட பெண் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது நிச்சயதார்த்தம் நடந்தது கூட எங்களுக்கு யாருக்கும் தெரியாது" என்று கூறியுள்ளார்.

சித்ராவின் திடீர் மரணம்... "இது 100% தற்கொலை இல்ல, காரணம்"... அடித்து சொல்லும் நடிகர் அசீம்..! வீடியோ

Tags : Azeem, Chitra

மற்ற செய்திகள்

Vijay tv actor azeem on chitra death சித்ராவின் மரணம் அடித்து சொல்லும் நடிகர் அசீம்

People looking for online information on Azeem, Chitra will find this news story useful.