www.garudavega.com

"வேண்டாம்னு சொல்லுங்க" - பைரவா SHOOT-ல டேனியல் பாலாஜிக்கு விஜய்யின் செல்ல அட்வைஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் டானியல் பாலாஜி. பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து வந்த டேனியல் பாலாஜி அண்மையில் தன்னுடைய தாயின் ஆசைக்காக கோயில் ஒன்றை கட்டியிருக்கிறார்.

Vijay told to avoid Daniel Balaji head shaving bhairava BTS

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழியில் நடித்துவரும் டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. வடசென்னை திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி அண்மையில் சில வாரங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Vijay told to avoid Daniel Balaji head shaving bhairava BTS

இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் சென்னை ஆவடிக்கு அருகில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி இதுகுறித்த விபரங்களை தற்போது மிக பிஹைணட்வுட்ஸ் தளத்துக்கு தன் அம்மாவுடன் இணைந்து கோயிலில் இருந்தபடி, பிரத்தியேக பேட்டியில் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் பைரவா திரைப்படத்தில் மொட்டை போட்டு நடித்தது குறித்து கேட்கும் பொழுது, “பொதுவாகவே நான் அதிக தலை முடி வைத்திருப்பதால் அதை வைத்து நடிப்பை மேனேஜ் செய்வேன் என்று சொல்லிவிடுவார்கள். அது இல்லாமலும் என்னால் பெர்ஃபார்ம் செய்ய முடியும் என்பதற்காகவே நான் அந்த காட்சியில் மொட்டை போட்டுக்கொண்டு நடித்து விட்டேன். அந்த படத்தை பொருத்தவரை எங்கேயும் குடும்பத்துடன் கனெக்ட் செய்யக்கூடிய எமோஷனலான காட்சி இடம்பெறாது, ஆனால் அதுதான் படத்தில் குறிப்பிட்ட அந்த கேரக்டரில் அழுத்தத்தை உண்டாக்கும் காட்சி. அப்போது குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் பாசத்தை காண்பிப்பதற்கு நமக்கு கலாச்சார ரீதியான இப்படியான ஒரு சடங்கு தேவைப்படுகிறது. நம் சமூகத்தில் இது வழக்கமான ஒன்று. அந்த அளவுக்கு அவர் குடும்பத்தின் மீது தொடர்பில் இருக்கிறார் என்று பறைசாற்றுவதற்கு உதவியது. அப்போதும் கடைசி நேரத்தில், ‘மொட்டை அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் டேனியல்’ என்று விஜய் சார் என்னிடம் கூறினார். நான்தான், ‘பரவால்ல சார் இருக்கட்டும்’ என்று இந்த விஷயத்தை விவரித்தேன்” என்று டேனியல் பாலாஜி குறிப்பிட்டார்.

"வேண்டாம்னு சொல்லுங்க" - பைரவா SHOOT-ல டேனியல் பாலாஜிக்கு விஜய்யின் செல்ல அட்வைஸ். வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay told to avoid Daniel Balaji head shaving bhairava BTS

People looking for online information on Bairavaa, Danieal Balaji, Vijay will find this news story useful.