கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கோவிட் லாக்டவுனுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ் தான் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிபடுத்தினார்.

இந்த விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணி கடைசியாக 2009இல் வெளியான வில்லு படத்தில் ஒன்றாக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.