ஏறக்குறைய 90களின் பிற்பகுதியில் தமிழில் சாட்டிலைட் டிவி சேனல்கள் வளர்ச்சி அடைந்தன.
தற்போதைய காலங்களில் பல டிஜிட்டல் நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. சேனல்களைப் பொறுத்தவரை சாட்டிலைட் சேனல்களும் இயங்கி வருகின்றன. சாட்டிலைட் சேனல்களும் டிஜிட்டலில் தங்களுடைய தளத்தை வலுவாக நிறுவி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வெகுஜன மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விடவில்லை. என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தனித்துவமாக விளங்கி வருகின்றன.
தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது. இதனை அடுத்து தற்போது விஜய் டிவி , விஜய் டக்கர் என்கிற புதிய சேனல் ஒன்றையும் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
மாறும் புதுமை.. மாறாத பெருமை.. 😊
என்றும் உங்கள் விஜய்.. 🥰 #MaarumPudhumaiMaaraadhaPerumai pic.twitter.com/PMKBQPsW0A
— Vijay Television (@vijaytelevision) October 23, 2022
அத்தகைய இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அத்தனை சாரரையும் கவரும்படியான பல பிரத்தியேக, புதிய மற்றும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவியின் லோகோ நிறம் இந்த தீபாவளி முதல் திடீரென மாறியுள்ளது.
ஆம், முன்னதாக பின்னணியில் நீலமாக இருந்த அந்த நிறம், தற்போது மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.