விஜய் அளித்துள்ள நேர்காணகான நேருக்கு நேர் நிகழ்ச்சி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
நேருக்கு நேர்…
பீஸ்ட் படத்தின் ரிலீஸை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது பேட்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் நெல்சனிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார் விஜய்.
அப்பாவும் மகனும்….
இந்த நேர்காணலில் இயக்குனர் நெல்சன் பல பர்ஸனல் கேள்விகளையும் விஜய்யிடம் கேட்டுள்ளார். அதில் தயங்கி தயங்கி ‘இதப் பத்திக் கேக்கலாமானு தெரியல பேமிலி பத்தி…’ என இழுக்க விஜய் புரிந்து கொண்டு ‘அப்பா பத்திதான’ எனக் கேட்டு தொடர்ந்து பேசியுள்ளார். அதில் ‘அப்பா என்பது செம்ம உணர்வு. கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். நம்மளால கடவுள பாக்க முடியாது. ஆனா அப்பாவ பாக்கமுடியும்.’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இதே நேர்காணலில் தனது மகன் பற்றியும் பல விஷயங்களைப் பேசிய விஜய் ‘சஞ்சய் நடிக்க போறாரா இல்ல கேமராக்கு பின்னால இருந்து செயல்பட போறாருன்னு தெரியல. நானும் காத்துட்டு இருக்கேன்’ எனக் கூறியுள்ளார். மேலும் பல இயக்குனர்கள் அவரை நடிக்க சொல்லி கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தளபதி 66 பற்றி…
இந்த நேர்காணலில் விஜய் தன்னுடைய அடுத்த படமான தளபதி 66 படம் பற்றியும் பேசியுள்ளார். அதில் ‘அந்த படம் ஒரு தமிழ்ப் படம்தான். எல்லோரும் தில்ராஜுவும் வம்சியும் தெலுங்கு நபர்கள் என்பதால் தெலுங்கு படம் என குழம்பி விட்டார்கள். அது தமிழ்ப் படம்தான்’ எனக் கூறியுள்ளார்.