#BREAKING: மாஸ்டர் விஜய் - குட்டிஸ்டோரிக்கு பிறகு பெரிய ஸ்டோரிக்கு குரல் கொடுக்க களமிறங்குகிறார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் டப்பிங் ஆரம்பம் | Vijay starts dubbing for master

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டப்பிங் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் இன்று முதல் மாஸ்டர் படத்தின் டப்பிங்கில் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை விரைவில் முடித்து, படத்தை சம்மருக்கு கச்சிதமாக ரெடி செய்ய லோகேஷ் அன்ட் டீம் திட்டமிட்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் டப்பிங் ஆரம்பம் | Vijay starts dubbing for master

People looking for online information on Anirudh Ravichander, Dubbing, Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.