www.garudavega.com

VARISU : “அன்பே என் போதை.. அன்புதான் உலகை ஜெயிக்கும்”.. ‘வாரிசு’ விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Vijay speech Sentiment Kutty Story in Varisu Audio Launch

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் இசை விழாவில் பேசிய விஜய், “வாய்ப்பு நமக்கு கிடைக்கும்போதெல்லாம் நன்றி சொல்லணும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு நன்றிகள்.” என பேசத் தொடங்கியவர், ஒரு குட்டிக்கதையை கூறினார். அதில் விஜய், “வாரிசு உறவுகளைப் பற்றிய படம் என்பதால் அதுகுறித்த ஒரு குட்டி கதை. ஒரு தந்தை, அவருடைய இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு சாக்லேட்களின் கதை இது.  அப்பா, அம்மா, தங்கை, அண்ணன் கொண்ட ஒரு குடும்பத்தில் தன் குழந்தைகளுக்காக அந்த அப்பா தினமும் சாக்லேட் வாங்கி  வருகிறார். தங்கை தனது சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்டுவிடுவார். ஆனால் அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளித்து வைத்து சாப்பிடுகிறார்.

Vijay speech Sentiment Kutty Story in Varisu Audio Launch

ஆனால் ஒரு நாள், ‘அன்புன்னா என்ன?’என அண்ணன்கிட்ட தங்கச்சி  கேட்க, ‘நீ எடுப்பனு தெரிஞ்சும் திரும்ப திரும்ப சாக்லேட்டை அதே இடத்துல ஒளிச்சு வைக்கிறேன்ல. அதுதான் அன்பு. அன்பு தான் உலகை ஜெயிக்கும். ரசிகர்களின் அன்பே என் போதை. அன்பே உலகின் பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்க ரசிகர்களின் இரத்த தான விசயம் பெருமையா இருக்கு. இனம், மதம், ஜாதி, வேறுபாடு இல்லாத ஒரே விஷயம் ரத்தம் தான்.  உங்களை எதிர்த்து பிரச்சனை வந்தால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என அர்த்தம். தேவையான விமர்சனமும், தேவையற்ற எதிர்ப்பும் நம்மை முன்னோக்கி ஓடவைக்கும்” என பேசினார்.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay speech Sentiment Kutty Story in Varisu Audio Launch

People looking for online information on வாரிசு, Varisu, VarisuAudioLaunch, Vijay speech will find this news story useful.