நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.
இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தீ தளபதி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவிலும் தோன்றியுள்ளார்.
"எகிறி எழுவான் என்னை எதிர்க்கவே.. பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே..தீ இது தளபதி பேர கேட்டா விசிலடி... தீ இது தளபதி உங்க நெஞ்சின் அதிபதி" போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன.
ITS TIME TO GIVE IT BACK MAMMMEE 🔥🔥🔥#TheeThalapathy Is Here To Fire it Up for along time 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
Dearest @actorvijay Anna Love U anna #30YearsOfThalapathyVijay ❤️🥁@SilambarasanTR_ 🔥💞 U
Volume UP GET UR SPEAKERS FIRED UP 🔥🥁https://t.co/COAnMUqDk7
— thaman S (@MusicThaman) December 4, 2022