சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
அட.. அஜித் பட நாயகி.. பிரபல டிவி சீரியலில் பரபரப்பு எண்ட்ரி.. மாஸ் ப்ரோமோ
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சென்ற ஆண்டு நிறைவுபெற்றது. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர் (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தின் டப்பிங் ஏற்கனவே துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை நயன்தாரா டப்பிங் பேசும் புகைப்படங்களுடன் ஒரு டிவீட் செய்து விக்னேஷ் சிவன் அறிவித்தார்.விஜய் சேதுபதியும் சில மாதம் முன் இந்த படத்தின் டப்பிங்கை முடித்து இருந்தார்.
இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டீசர் 11.02.2022 அன்று வெளியாகும் எனவும் இந்த படம் வரும் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் ஒரிரு நாளுக்கு முன் அறிவித்துள்ளார்.
அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் இரண்டு படங்களின் தமிழக உரிமத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!