Godavari News Banner USA
Game Over Others Banner USA
Fakir Others Banner USA

‘அண்ணன் மட்டுமா நானும் தான்..’ - விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து அடுத்த பெர்ஃபாமர் ரெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ‘சங்கத்தமிழன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

Vijay Sethupathi's daughter will be acting in his next movie Sangathamizhan

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சிந்துபாத்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில், ‘லாபம்’, ‘மாமனிதன்’, மலையாளத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ள ‘மார்கோனி மதாய்’, ‘தெலுங்கில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘க/பெ.ரணசிங்கம்’, இன்று(ஜூன்.14) அறிவிக்கப்பட்ட விஜய்சேதுபதி 33வது படம் ஆகியவை அவரது கைவசம் உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi's daughter will be acting in his next movie Sangathamizhan

People looking for online information on SangaTamizhan, Shreeja Sethupathi, Vijay Chandar, Vijay Sethupathi will find this news story useful.