www.garudavega.com

VJS46: பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. கேரக்டர் பெயருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi Vjs46 First Look Poster Title Update

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.  இந்த படத்தில் திண்டுக்கல் மாவட்ட ஐபிஎஸ் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் பொன்ராம் தனது முதல் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

Vijay Sethupathi Vjs46 First Look Poster Title Update

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. சில மாதங்களுக்கு முன்  செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

Vijay Sethupathi Vjs46 First Look Poster Title Update

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & படத்தின் தலைப்பு நவ. 10 அனறு இரவு 7:40 மணிக்கு வெளியாகும் என விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி நிற்பது போல Silhouette தன்மையில் போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கதாபாத்திர பெயர் வாஸ்கோடகாமா என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி, ஜவான், மும்பைக்கர், மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Vjs46 First Look Poster Title Update

People looking for online information on Ponram, Vijay Sethupathi, VJS46 will find this news story useful.