விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, "விடுதலை படத்தில் நடிக்க 8 நாள் கால்சீட் கேட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மல்லியமன் ஊரில் படப்பிடிப்பு நடந்தது. காகங்கள் இல்லாத ஊர் அது. 8 நாள் அந்த ஊரில் என்னை வச்சு ஆடிசன் தான் பண்ணார். வெற்றிமாறன் சார் படப்பிடிப்பு தளத்தில் என் குழந்தைகளை அழைத்து சென்றேன். எனக்கு கிடைத்த அறிவு என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று. படம் பார்க்கும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்ய முடியும். அதேவேளையில் அதை உபயோகமாக மாற்றுவது எப்படி?. வெற்றிமாறன் பொறுப்பா செயல்படும் அற்புதமான இயக்குனர்". என விஜய் சேதுபதி பேசினார். பின்னர் பேசிய வெற்றிமாறன், "விஜய் சேதுபதியை 8 நாள் கால்சீட் வாங்கி 65 நாட்கள் நடிக்க வைத்து விட்டதாக" கூறினார்.