நடிகர் விஜய் சேதுபதி முன்னணி திரைப்பட நடிகராக தமிழில் வலம் வருவதுடன், தென்னிந்திய மற்றும் இந்தி மொழியிலும் படங்களில் நடிக்கிறார்.
Also Read | “ஒரு வாரமா ஆம்பளைங்க சமைச்சோமே..” .. கிச்சன் டீம் களேபரம்.. ஏடிகேவின் செம thug life.. bigg boss 6
தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட விஜய் சேதுபதி கடந்த 2004 ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, 2010 ல் சீனு இராமசாமி இயக்கத்திலான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன் பிறகுன் 2012 ல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்திலான முறையே பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களில் நல்ல வரவேற்பை அடுத்து நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா, தர்மதுரை, கவண், 96, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரஞ்சு மிட்டாய், முகில் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.
நவரசா உள்ளிட்ட வெப் தொடர்கள், ஆந்தாலஜி திரைப்படங்களிலும் நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் நெகடிவ் ரோலில் மாஸ் காட்டினார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படம் வெளியானது. தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவரக திகழும் நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது குண்டான உடல்வாகுவே பலருக்கும் பிடித்தமானது என்றாலும், உடலை குறைத்தால் பழைய விஜய் சேதுபதியை பார்க்க இயலும் என விரும்பக்கூடிய பலரும் உள்ளனர்.
ஆனால் உடலை குறைப்பதோ, ஃபிட்டாக இருப்பதோ எல்லாம் ஒரு மாயை, அதில் ஒன்றும் இல்லை என ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி, கதைக்கு தேவைப்பட்டால் அதை செய்யலாம் என கூறியிருந்தார். இந்நிலையில் உடலை குறைத்து இன்னும் ஹேண்ட்சமான லுக்கில் விஜய் சேதுபதி புதிய ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸாடாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | “ஏங்க பிரச்சனை பண்றீங்க?”.. விக்ரமன் & ஷிவினிடையே தொடங்கிய வாக்குவாதம் bigg boss 6 tamil