சன் டி.வியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (29-08-2021) ஒளிபரப்பான 8-வது எபிசோடில் சசி அம்மாள் என்பவர் எலிமினேட் ஆகியுள்ளார்.
சன் டி.வியில் ஒளிபரப்பாகும் இந்த சமையல் நிகழ்ச்சி தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் 7 எபிசோடுகள் நிறைவடைந்த நிலையில், 8வது எபிசோடில் சசி அம்மாள் விடைபெற்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் சுனிதா சுவையில்லாத உணவை நடுவர்களுக்கு பரிமாறியதாக நடுவர் கூற, சுனிதா குற்றவுணர்ச்சியில் அழத் தொடங்கிவிட்டார்.
அப்போது பேசிய நடுவர் ஹரீஷ், சுனிதாவை பார்த்து “செஃப் ஆகணும்ங்குறது தானே உங்க கனவு... அதுவும் கடைசி வாய்ப்புல வந்தீங்க.. இது எலிமினேஷன் ரவுண்டுன்னு தெரியும் இல்லையா..? ஒருவேளை ஓவர் கான்ஃபிடண்ட்ல இருந்துட்டீங்களா?” என்றெல்லாம் கேட்க, தலைகுனிந்தபடி அழுதார் சுனிதா.
மேலும் சமையல் போட்டி விளையாட்டு அல்ல என்று கூறிய நடுவர்கள், சசி அம்மாள் மற்றும் சுனிதா ஆகிய இருவரில் சுனிதாவை தேர்ந்தெடுத்தனர். சசி அம்மாவுக்கு விடைகொடுத்தனர். சமைப்பதற்காக தரப்பட்ட பொருளான ‘கோக்கம் ஃபிஷ் கறி’யை பிரதானமாக வைத்து சமைக்காததால் சசியம்மாள் விடைபெற்றார்.
சுனிதா தயாரித்த உணவில் ‘சுவை’ இல்லை என்பதால் நடுவர்கள் அவரை இப்படியான கேள்விகள் கேட்டனர். எனினும் கொடுத்த டாஸ்க்கை சரியாகப் பின்பற்றியிருந்ததால், சுனிதா தேர்வானார்.