Reliable Software
www.garudavega.com

VIDEO: 'வேற லெவல்' விஜய் சேதுபதி!.. "பிரம்மாண்ட சமையல் ஷோ".. வெளியான அடுத்த புரோமோவ பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் சமையல் நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தமிழிலும் கூட சமையல் எனும் ஒரு கருவியை வைத்து பரபரப்பான நிகழ்ச்சிகள் சேனல்களிலும் யூடியூப்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay Sethupathi Master Chef Tamil next viral promo sun tv

சமையல் நிகழ்ச்சிகள் வழக்கமாக இல்லாமல் புதுமையான டாஸ்குகளுடன் கூடிய சுவாரஸ்யமான முறையில் இருந்தால் எளிதில் அனைவருக்கும் அந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் ஃபேவரைட்டான நிகழ்ச்சிகளாகவே மாறிவிடுகின்றன. இந்நிலையில் தான் சன்.டிவியில் பிரம்மாண்டமான மாஸ்டர் செஃப் தமிழ் எனும் சமையல் நிகழ்ச்சி வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகிவந்தன.

இதனிடையே இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட புரோமோவில் விஜய் சேதுபதி தோன்றும் விளம்பரங்கள் அவ்வப்போது சன்.டி.வியில் வெளியாகி வருகின்றன. இதன் ஒரு புரோமோவில் ஹெலிகாப்டரில் மாஸாக வந்திறங்கும் விஜய் சேதுபதி, “இது மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சி.. விரைவில் உங்கள் சன்.டிவியில்” என அந்த ப்ரோமோவில் பேசுகிறார். 

இதேபோல் நேற்று வெளியான இன்னொரு புரோமோவில் தோன்றும்  விஜய் சேதுபதி, “அவிக்குறது.. அவிச்சு வேக வைக்குறது.. வறுத்து அவிக்குறது.. சுடுறது .. வத்தலாக்குறது.. எண்ணெய்ல போட்டு பொறிக்குறது.. வேக வைச்சு ஊற வெக்குறது.. ஊறவெச்சு வேகவெக்குறது.. இதெல்லாம் காலம் காலமா நம்ம கிட்ட இருக்குற நம்மளோட சமையல் முறைகள்.

ஆனால் இந்த முறை அதுமட்டும் பத்தாது. அதோட சேர்த்து ஒரு சிட்டிகை புதுமை.. தேவைக்கேற்ப திறமை.. போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நிறைய அன்ப கொட்டி சுவையா சமைக்குற சமையல் கலையை கொண்டாடுறதுதான் இந்த பட்டர்ஃப்ளை மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி.. இது நம்ம மக்கள் சமைக்கும் டக்கர் சமையல் டேஸ்ட் பண்ண ரெடியா இருங்க.. விரைவில் உங்கள் சன்.டிவியில்” என்று கூறுகிறார். இந்த ப்ரோமோக்கள் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

ALSO READ: "நம்ம குக் வித் கோமாளி அஷ்வினா இது?".. காலேஜ் படிக்கும்போது தெறிக்கவிடும் நடனமா?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Master Chef Tamil next viral promo sun tv

People looking for online information on MasterChef, MasterChefOnSunTV, MasterChefTamil, Sun TV, Vijay Sethupathi will find this news story useful.