‘மாமனிதன்’ ரிலீஸில் மாற்றம்… விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய தேதி! VIRAL PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Vijay sethupathi maamanithan release postponed to june

விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணி…

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படும் ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார்.

Vijay sethupathi maamanithan release postponed to june

இளையராஜா- யுவன்ஷங்கர் ராஜா முதல் முறையாக

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. இந்த கூட்டணிக்காக படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன.

இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ‘தர்மதுரை’  தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார். 

Vijay sethupathi maamanithan release postponed to june

மாமனிதன் ரிலீஸ் மாற்றங்கள்…

மாமனிதன் திரைப்படம் முதலில் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால் அந்த தேதியிலும் படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து இப்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. இது சம்மந்தமான புதிய போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் மாமனிதன் திரைப்படம் ஜுன் 23 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay sethupathi maamanithan release postponed to june

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

Nenjuku Needhi Home

‘மாமனிதன்’ ரிலீஸில் மாற்றம்… விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய தேதி! VIRAL PIC வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi maamanithan release postponed to june

People looking for online information on Ilaiyaraaja, Maamanithan, Seenu ramasamy, Yuvan Shankar Raja will find this news story useful.