காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி திரைப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்கிற தேனியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை நடிக்க வைத்திருந்தார் மணிகண்டன். அந்த முதியவருடன் இணைந்து மற்றக் கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹார்வி ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.
பிரபல போட்டியாளரை திருமணம் செய்யும் நிரூப்? கொண்டாடும் ஹவுஸ்மேட்ஸ்.. என்ன நடக்குது?
பாராட்டு மழையில் நனைந்த கடைசி விவசாயி:
கடைசி விவசாயி திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு தீவிர சினிமா விரும்பிகளிடம் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலிஸ் ஆனதில் இருந்தே நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக நல்லாண்டி தாத்தா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய மூவரின் நடிப்பும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.
விளைநிலங்களை வீட்டுமனையாக்கும் வியாபாரிகளை எதிர்த்தும் தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் கிராமத்து கடைசி விவசாயி எப்படி, அதிகாரம் படைத்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்கவைக்கப்படுகிறார்? சிறையில் இருந்து மீண்டாரா? அவர் விவசாயத்துக்காக தனி ஆளாக நடவு நட்ட நாற்றுகள் என்ன ஆனது? என்பதே கடைசி விவசாயி படத்தின் கதை.
உச்சிமுகர்ந்து பாராட்டிய மிஷ்கின்:
படமாக்கப் பட்ட விதத்தால் இந்த படம் ரசிகர்களாலும் சினிமா விரும்பிகளாலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தைப் பார்த்துவிட்டு ‘நாம் எவ்வளவு பொறுக்கி படங்களை பாத்திருப்போம், எவ்வளவு மோசமான படங்களை நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம். இந்த படத்தையும், இந்த படத்தை எடுத்த மணிகண்டனையும் கொண்டாடவில்லை என்றால் நமக்குள் எந்த ஸ்பிரிச்சுவல் (ஆன்மீக) தன்மையும் இல்லை என்று அர்த்தம். இதை ஒரு முஸ்லீம், கிருஸ்தவர், பௌத்தத்தை சேர்ந்தவர் என எல்லோராலயும் கொண்டாடப் படவேண்டும்’ எனப் பேசியிருந்தார். அத்தோடு நில்லாமல் இயக்குனர் மணிகனடனின் ஊருக்கே சென்று கட்டுத்தழுவி மாலை அணிவித்து பாராட்டினார்.
ஓடிடி வெளியீடு
பாராட்டு மழையில் நனைந்த கடைசிவிவசாயி திரைப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி மூலமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு தரமான படம் அண்டை மாநில ரசிகர்களுக்கும் சென்று சேர உள்ளது.
வலிமை தயாரிப்பாளருடன் இணையும் RJ பாலாஜி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ? மங்களகரமான அப்டேட்