கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.
Also Read | Gatta Kusthi : மனைவியுடன் விஷ்ணு விஷால்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்..
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன்.அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை விஜய் சேதுபதி முன்பு காலில் விழு வேறொரு கலைஞன் வருவான்." என பேசினார்.
இந்நிலையில் சன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குநர் பொன்ராமிடம், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து படம் எடுத்தால் யார் ஹீரோ, யார் வில்லன் என கேட்கப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதியோ, “நானே வில்லனா இருந்துக்கிறேன்” என கூறியுள்ளார்.
இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயன் நடிப்பிலான வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர். தற்போது விஜய் சேதுபதியை டிஎஸ்பி திரைப்படத்தில் இயக்கியுள்ளார். எனவேதான் அவரிடம் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி இணைந்து நடிப்பது குறித்த இந்த கேள்வி கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நானே வில்லனா இருந்துக்குறேன்-ப்பா!
DSP சிறப்பு நிகழ்ச்சி | Tomorrow | 8.30 AM #DSP #DSPSirappuNigazhchi #DSPSirappuNigazhchiOnSunTV #VijaySethupathi #SunTV pic.twitter.com/M7dY3nCvMq
— Sun TV (@SunTV) November 26, 2022
Also Read | "அது பத்தி நான் சொல்லக் கூடாது".. ஷங்கரின் RC15 படம் குறித்து S.J. சூர்யா