'சங்கத்தமிழன்' படத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறகு தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்', 'லாபம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 7C's எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தனது விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Here it is Makkal Selvan @VijaySethuOffl ‘s #LaabamFirstLook
A Day Light Robbery 🔥@shruthihaasan #SPJhananathan@immancomposer @7CsPvtPte @Aaru_Dir @ramji_ragebe1 @sathishoffl @KalaiActor @SaiDhanshika @thilak_ramesh @proyuvraaj @yogeshdir @LahariMusic pic.twitter.com/62LlmjuQ5K
— VSP_Productions (@vsp_productions) January 11, 2020