லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படமும் ஹிட்டாகி இருந்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 03 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் தான் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மாஸ்டர் & விக்ரம் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரம் இறப்பது போல காட்சிகள் இல்லை. எனவே தளபதி 67 படத்தில் சந்தனம் கதாபாத்திரம் இருக்குமா?" என்ற கேள்விக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி, "அப்படி எல்லாம் எந்த ஒரு பேச்சும் இல்லை. தொடர்ந்து இதே கதாபாத்திரத்தை செய்தால் அதன் மீதான ஆர்வம் குன்றி விடும். எனவே இதை விஜய் சார் & லோகேஷ் கனகராஜ் செய்யமாட்டார்கள். நானும் கண்டிப்பா செய்ய மாட்டேன்"" என விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.