Oh My Dog
Anantham Mobile
www.garudavega.com

EXCLUSIVE: '96' படத்தின் கிளைமாக்ஸ்ல லிப் கிஸ் காட்சி.. மனம் திறந்த விஜய் சேதுபதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Vijay Sethupathi about 96 Movie Climax Version with Trisha

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

Vijay Sethupathi about 96 Movie Climax Version with Trisha

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னை, பாண்டிச்சேரியில் நடந்தது. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Vijay Sethupathi about 96 Movie Climax Version with Trisha

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நமது BEHINDWOODS சேனலுக்கு விஜய் சேதுபதி பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புகொண்டதாக கூறினார். மேலும் நடிகைகள் சமந்தா, தமன்னா, நயன்தாரா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக நானும் ரவுடி தான் படத்தின் வேற வெர்ஷன் கதையை சொல்லும் போது தூங்கிவிட்டதாகவும், 'போடா போடி' படத்தின் மீதான நம்பிக்கையில் படம் செய்ததாகவும் கூறினார். 

Vijay Sethupathi about 96 Movie Climax Version with Trisha

மேலும் 96 படம் பற்றி பேசும் பொழுது, படத்தின் கதை ஓட்டத்தை பற்றி வியந்து பேசினார். 96 படம் பற்றிய தனது புரிதலையும் விளக்கினார். படத்தில் அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் முத்தக்காட்சி இருந்ததாகவும், அந்த காட்சியை பார்ப்பவர்கள், தாங்களும் இது போல் செய்ய தவறான முன் உதாரணம் ஆகி விடும் என்று படப்பிடிப்பு செய்யாமல் நீக்கி விட்டதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

EXCLUSIVE: '96' படத்தின் கிளைமாக்ஸ்ல லிப் கிஸ் காட்சி.. மனம் திறந்த விஜய் சேதுபதி! வீடியோ

EXCLUSIVE: '96' படத்தின் கிளைமாக்ஸ்ல லிப் கிஸ் காட்சி.. மனம் திறந்த விஜய் சேதுபதி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi about 96 Movie Climax Version with Trisha

People looking for online information on 96, Kaathuvaakula Rendu Kadhal, KRK, Nayanthara, Samantha, Trisha, Vignesh shivan, Vijay Sethupathy will find this news story useful.