BREAKING : தீபாவளி அன்று இல்லை! புதிய ரிலீஸ் தேதியை லாக் செய்த விஜய்சேதுபதின் "சங்கத்தமிழன்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரித்து, விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை 'வாலு, 'ஸ்கெட்ச்' படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கிவருகிறார்.

Vijay Sethuapathi Sangathamilan pre poned to October 4th

விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் டீஸரும், கமலா என்கிற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சங்கத் தமிழன் தீபாவளி கொண்டாட்டம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படம் தீபாவளிக்கு முன்பே அக்டோபர் 4 தேதி ரிலீசாகிறது என்பதுதான். 

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' மற்றும் தளபதி 64 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் கைதி  படமும் தீபாவளி முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethuapathi Sangathamilan pre poned to October 4th

People looking for online information on Raashi Khanna, Sanga Thamizhan, Vijay Sethupathi will find this news story useful.