நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்துள்ள நேர்காணல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பீஸ்ட் எதிர்பார்ப்பு…
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
டிரைலர் தந்த goosebumps….
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த டிரைலரில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விஜய் பேசும் வசனங்கள் ஆகியவை, விஜய் ரசிகர்களுகு goosebump தருணங்களாக அமைந்துள்ளன. தீவிரவாதிகளால் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதில் எதிர்பாராத விதமாக ராணுவ உளவாளியான வீரராகவன் (விஜய்) மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி அங்கிருந்து தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுகிறார் என்று காட்டப்படுகிறது. அதுபோலவே ராணுவ வீரரான விஜய்யின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பேட்டி ஏன் கொடுக்குறதில்ல…
இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது பேட்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் நெல்சன் விஜய்யிடம் ’10 வருஷமா ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கல” எனக் கேட்கிறார். அதற்கு விஜய் ’ஒரு இன்சிடண்ட் நடந்தது 10 வருஷத்துக்கு முன்ன. நான் சொன்ன ஒரு வார்த்தய எழுதும்போதும் அது தப்பா கன்வே ஆயிடுச்சு. என் ப்ரண்ட்ஸ் குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் என்ன கூப்டு கேட்டாங்க. என்ன இவ்ளோ திமிரா பேசிருக்க, நீ இப்படிலாம் பேசமாட்டியே என கோவிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு நான் என்ன புரிய வச்சுட்டேன். ஆனால் அத படிச்ச எல்லோருக்கும் நான் புரிய வைக்க முடியாதுல. இது என்னடா வம்பா போச்சுனு அப்படியே சைலண்ட் ஆயிட்டேன்.’ எனக் கூறியுள்ளார்.