Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

'தோனியை ஏன் கேப்டன் கூல்னு சொல்றோம் தெரியுமா?'.. 10 மில்லியன் பார்வைகளை கடந்த MASTER DELETED SCENE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.

Vijay Over MS Dhoni in Master Deleted Scene மாஸ்டர் விஜய் தோனி

தளபதி விஜயை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் கமிட் ஆகியிருக்கிறார் என்று தெரிந்த உடனேயே ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை. நேர்த்தியான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு எப்படியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் அதிகமானது.

ஆனால் மாஸ்டர் திரைப்படம் குறித்து ஒவ்வொரு தகவல் வெளியாகும் போதும் அந்த படத்துக்கு பலம் கூடிக் கொண்டே சென்றது. கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்பதும் ரசிகர்கள் உற்சாகம் ஆகினர். அதன் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு கதை போகிறது என்று தெரிந்ததும் ஆஹா படம் மிரட்டுகிறது என்று நினைத்தனர். விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் ரசிகர்களுக்குமே ஆர்வம் மிகுதி உண்டானது.

இப்படி முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் பேக்கேஜாக திரைப்படம் உருவானதுடன் படத்தில் இருந்த மெசேஜ் மற்றும் படம் முழுக்க விஜய் அவ்வப்போது சொல்லும் ‘தமிழ் சினிமாவின் பிரபலமான’ குட்டி ஸ்டோரிகள் கவனம் ஈர்த்தன. குட்டி ஸ்டோரி பாடல், வாத்தி கம்மிங் பாடல் என அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பின. இத்தனை அம்சங்களுடன் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நேரத்தில் திரையரங்குகளுக்கும் நூறுவீதம் இருக்கை அனுமதிக்கப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அனைத்து படங்களுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட மாஸ்டர் திரைப்படம் முன்னோடியாக இருந்தது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் மாஸ் திரைப்படமாக இன்னும் 50 நாட்களை கடந்து மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அமேசானில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் அண்மையில் தான் மாஸ்டர் படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகின. அதில் நெருக்கடியான சூழலிலும் நிதானமாக முடிவெடுப்பதால் தான் தோனியை கூல் கேப்டன் என்று நாம் அழைக்கிறோம் என விஜய் தமது மாணவர்களிடையே பேசுகிறார். அத்துடன் கல்லூரியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மாணவனை விசாரித்து உண்மையை வரவழைத்து, அவனது அம்மாவுக்கும் மற்ற பேராசிரியர்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.

இந்த வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனிடையே மாஸ்டர் படம் 50 நாட்களை கடந்து ஓடுவதையொட்டி அப்படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் தமது இன்ஸ்டாகிராமில் சிறப்புப் குறிப்பினையும் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: 50 நாள்!.. இன்ஸ்டாகிராமில் 'மாஸ்டர்' ஹீரோயின் உருக்கமான போஸ்ட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Over MS Dhoni in Master Deleted Scene மாஸ்டர் விஜய் தோனி

People looking for online information on Amazon Prime Video, Lokesh Kanagaraj, Master, Master Tamil, Vijay, XB Film Creators will find this news story useful.