RRR Others USA

BEAST TRAILER: போடு சரவெடிய விஜய் FANSக்கு செம ட்ரீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

Vijay movie beast trailer released Nelson Anirudh

இதில் விஜய்க்கு ஜோடியாக, நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீஸ்ட் டிரைலர் 'அப்டேட்'

ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. முன்னதாக, பீஸ்ட் படத்தில் இருந்து 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்து வருகிறது. இதனிடையே, ஏப்ரல் 13 திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வந்த பிறகு, பீஸ்ட் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இதனால், பீஸ்ட் படத்தின் டிரைலர் அல்லது டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த சமயத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் "நாளை" என கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று, ஒரு வார்த்தையில் ட்வீட் போட, ஆர்ப்பரித்து தள்ளினர் ரசிகர்கள். தொடர்ந்து, நெல்சனின் ட்வீட்டிற்கு மறுநாள் அதாவது மார்ச் 30 ஆம் தேதி அன்று, பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 02 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த 'டிரைலர்'...

அதன்படி, தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர், இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. இந்த டிரைலரில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விஜய் பேசும் வசனங்கள் ஆகியவை, ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay movie beast trailer released Nelson Anirudh

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast Trailer, Manoj Paramahamsa, Nelson Dilipkumar, Pooja Hegde, Selvaraghavan, Sun pictures, Vijay, Yogi Babu will find this news story useful.