'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்டிராக்டர் நேசமணியாக நடித்த வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழும் காமெடி உலக அளவில் டிரெண்டானது. இதனையடுத்து Behindwoods Tv க்கு நடிகர் வடிவேலு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அந்த பேட்டியும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அப்போது பேசிய வடிவேலு, '24 ஆம் புலிகேசி' பட விவகாரம் குறித்தும், இயக்குநர் சிம்பு தேவன் குறித்தும் பேசினார். அவரது பேச்சு தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில், ''அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!'' என்று தெரிவித்துள்ளார்.
தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல!உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.#dont_forget_the_creators @chimbu_deven @NaveenFilmmaker @thondankani @directorshankar pic.twitter.com/HFANc0KS3D
— sd.vijay milton (@vijaymilton) June 11, 2019