தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தூத்துக்குடியில் திமுகவுக்கு ஆதரவளித்து போட்டியிடாமல் இருக்க முடிவு செய்து உள்ளது.
துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற நடிகை காஜல் அகர்வால்! முழு தகவல்!
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துவிட்ட நிலையில் தற்போது நகராட்சி , பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள இருப்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கம் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர். அதில் 129 பேர் வெற்றிப் பெற்றதாக மக்கள் இயக்கத்தினர் மூலம் கூறப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி வழங்கி உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் Ex MLA தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மட்டும் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும், விஜய் மக்கள் இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் அறிவித்துள்ளார். இது தூத்துக்குடி விஜய் ரசிகர்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், "திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை புஸ்ஸி ஆனந்துக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் பில்லா ஜெகன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருபவர் தான் பில்லா ஜெகன். பில்லா ஜெகன் விஜய் மக்கள் இயக்க தலைவராக மட்டுமல்லாமல், திமுக கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் மீது அடிதடி, கொலை மிரட்டல், கொலை என பல வழக்குகள் உள்ளன. சொந்த தம்பியை துப்பாகி மூலம் கொலை செய்ததால் திமுகவின் செயற்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனுக்கு நெருக்கமான இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட உதவியாளர் போல் இருந்தவர் தான் பில்லா ஜெகன். அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் என்பதும், ,மாவட்ட அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் அணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியும், பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது. 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது. 490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் மேயர் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.17,000 வரை செலவு செய்யலாம் என்றும் மேயர் , துணை மேயர் , நகர் மன்ற தலைவர், பேரூராட்சி சேர்மன் பதவியிடங்களுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் செலவின கணக்குகளை பிப்.22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நயன்தாரா இல்லாம தான் டூர் போனும் போல.. விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு!