விஜய்யின் மக்கள் இயக்கம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. சினிமா மட்டுமின்றி, நடிகர் விஜய் சமூக நலத்திட்டங்களை அவரது மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது. தற்போது மக்கள் இயக்கத்தில் பல்வேறு ஊர்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவை முறையான அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதில் விஜய்க்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கூறப்பட்ட நிலையில், அவரது பணையூர் இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தளபதி அவர்களால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகள்...@actorvijay @Jagadishbliss @RIAZtheboss @PondySaravanan pic.twitter.com/1FKP9mo3kg
— Bussy Anand (@BussyAnand) November 11, 2020