RRR Others USA
www.garudavega.com

அட..! செம ஸ்மார்ட் தளபதி விஜய்.. வெளிவந்த பீஸ்ட் படத்தின் புதிய BTS ஸ்டில்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இணையத்தில் வைரலாகும் தளபதி விஜயின் பீஸ்ட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் (BTS).

Vijay fans on beast mode.. Celebrating Beast pictures.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Vijay fans on beast mode.. Celebrating Beast pictures.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay fans on beast mode.. Celebrating Beast pictures.

KGF2-ம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆவதால் முதல் நாள் வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஷூட் போது எடுக்கப்பட்ட தளபதி விஜயின் படங்கள் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay fans on beast mode.. Celebrating Beast pictures.

People looking for online information on Beast, BTS, KGF Chapter 2, Valimai, Vijay will find this news story useful.