Reliable Software
www.garudavega.com

"குரங்குகளுக்கு தண்ணீர் & உணவுப்பொருட்கள்".. நெகிழ வைத்த தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன.

vijay fans arranges water and food for monkeys heartfelt pics

தற்போது கடுமையான வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் நிலவுவதால் சுற்றிலும் காடு போல் இருக்கும் அப்பகுதியில் குரங்குகளுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.  இதனால் நிரந்தரமாக குரங்குகளுக்கு  தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய்  மக்கள் இயக்கம் சார்பாக  செய்துள்ள செயல் நெகிழவைத்துள்ளது.

vijay fans arranges water and food for monkeys heartfelt pics

ஆம், அவற்றுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்யும் வகையில் தண்னீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கென்று, அதில் தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் குரங்குகளுக்கு உண்பதற்காக வாழைப்பழங்கள் வழங்கியும் உள்ளனர்.

vijay fans arranges water and food for monkeys heartfelt pics

அத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர்  ஜெ.பர்வேஸ் ,சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ,தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

vijay fans arranges water and food for monkeys heartfelt pics

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினரை மற்றைய விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் மற்றும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கும் உதவிகளை செய்துள்ளனர்.

ALSO READ: வெடிக்கும் 'The Family Man 2'.. அமேசான் வெப் சீரிஸ் சர்ச்சை!.. தடை கோரும் வைகோ!.. காரணம் என்ன?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay fans arranges water and food for monkeys heartfelt pics

People looking for online information on ThalapathyVijay, Trending, VijayFans, VijayMakkalIyakkam will find this news story useful.