www.garudavega.com

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் PAN INDIA படம் 'குஷி'.. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

Vijay Deverakonda Samantha Kushi Movie Release Date

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கையிலே ஆகாசம்.. விமான பயணத்தில் ரஜினியுடன் ‘சூரரைப்போற்று’ நாயகி.. வைரல் ஃபோட்டோ!

நடிகர் விஜய் தேவரகொண்டா & சமந்தா நடிப்பில் 'குஷி'  திரைப்படம் உருவாகி வருகிறது.  ‘குஷி’ படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் கடந்த ஆண்டு வெளியிட்டனர்.  'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

Vijay Deverakonda Samantha Kushi Movie Release Date

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Vijay Deverakonda Samantha Kushi Movie Release Date

Images are subject to © copyright to their respective owners.

'குஷி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று  தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

Vijay Deverakonda Samantha Kushi Movie Release Date

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இரண்டு வெவ்வேறு உலகத்தில் வாழும் காதலர்களின் காதல் மேஜிக்கை காண தயாராகுங்கள்" என்ற வாசகத்துடன் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | அஜித் பட தயாரிப்பாளருடன் 'அல்போன்ஸ் புத்திரன்.. அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Deverakonda Samantha Kushi Movie Release Date

People looking for online information on Kushi Movie, Samantha, Samantha Kushi Movie Release update, Vijay Deverakonda will find this news story useful.