www.garudavega.com

விஜய் தேவரகொண்டா கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு அழுத சமந்தா.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை பல்லாவரத்தை சார்ந்த நடிகை சமந்தா,  நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Surprise

Also Read | LATEX உடையில் நடிகை தமன்னா ஹாட் போட்டோஷூட்.. இதுக்கு தானா? அவரே சொன்ன சூப்பர் தகவல்

சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு இணைந்து நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ நேற்று சமந்தாவின் பிறந்தநாள் தினத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது

தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Surprise

தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் தனது அடுத்த படத்தை சமந்தா அறிவித்துள்ளார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஷிவ நிர்வானா இயக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். ஹேஷம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Surprise

இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தாவுக்கு விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் சர்ப்ரைஸ்  கொடுத்தார். பொய்யாக பட சீன் அமைத்து சமந்தாவை படக்குழு ஏமாற்றி, பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளனர். பெரிய கேக் வெட்டி படக்குழுவுடன் சம்ந்தா பிறந்தநாளை கொண்டாடினார். இசூழலில் சம்ந்தா அழுதது வைரலாகி வருகிறது.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Surprise

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விஜய் தேவரகொண்டா கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு அழுத சமந்தா.. வைரல் வீடியோ வீடியோ

விஜய் தேவரகொண்டா கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு அழுத சமந்தா.. வைரல் வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Surprise

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, VD 11 Movie, Vijay Devarakonda will find this news story useful.