விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் கூட்டணியில் லைகர்… வெளியானது அட்டகாசமான HUNT தீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு லைகர் படத்தின் தீம் இசை வீடியோ வெளியாகியுள்ளது.

Vijay devarakonda liger movie hunt theme released

Also Read | BREAKING: கார்த்தி பிறந்தநாளில் ‘சர்தார்’ படத்தின் அடுத்த அப்டேட்…? வெளியான தகவல்!

விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் – லைகர்…

அர்ஜுன் ரெட்டி மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இப்போது அவர் நடிப்பில் லைகர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குத்து சண்டை வீரர் மைக் டைசன், நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Vijay devarakonda liger movie hunt theme released

மீண்டும் இணைந்த லைகர் கூட்டணி…

இந்த லைகர் படத்தை அடுத்து அடுத்த திரைப்படமான “JGM” படத்தில் விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் இணைய உள்ளனர். JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022  துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Vijay devarakonda liger movie hunt theme released

லைகர் HUNT THEME…

இந்நிலையில் இன்று விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு லைகர் படத்தின் புதிய போஸ்டரும் ‘லைகர் வேட்டை’ தீம் பாடலின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது. மிரட்டலான பில்ட் அஃப் பாடலாக இருக்கும் லைகர் ஹண்ட் வீடியோவில் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் போராட்டம் மற்றும் எழுச்சி ஆகிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சம்மந்தமான அறிவிப்போடு விஜய் தேவரகொண்டா “சிறு வயதில் இருந்தே பிழைப்புக்காக போராடி வரும் போது, நீ வேட்டையாட கற்றுக்கொள்வாய்” எனக் கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Vijay devarakonda liger movie hunt theme released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் கூட்டணியில் லைகர்… வெளியானது அட்டகாசமான HUNT தீம்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay devarakonda liger movie hunt theme released

People looking for online information on Liger Movie, Liger movie hunt theme release, Liger Movie Updates, Vijay Devarakonda will find this news story useful.