தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
Also Read | "பெயிடு ஹாஸ்டல்லயா இருக்கீங்க".. ‘நேருக்கு நேர்’.. அசிம் Vs ரச்சிதா... அனல் பறந்த வாதம்..! Bigg Boss 6 Tamil
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் ரஷ்மிகாவை பார்த்து காதலில் விழும் விஜய்யிடம் யோகிபாபு, “காதல் சில பேருக்கு பூ மாதிரி. அது ஒரு முறை உதிர்ந்துட்டா மறுபடியும் எடுத்து ஒட்ட வைக்க முடியாதுப்பா” என கூறுகிறார். இதற்கு விஜய்யோ, “அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம்ப்பா” என பதில் அளிக்கிறார். இங்கு யோகி பாபு குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல. விஜய்யை தான். ஆம், அவர் சொல்லும் அந்த சில பேரு - விஜய் தான்.
விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கிய, ‘பூவே உனக்காக’ படத்தில் நடிகர் விஜய், “சில பேருக்கு காதல் செடி மாதிரி, ஒரு பூ உதிர்ந்தால் அடுத்தடுத்து பூ பூர்க்கும். சில பேருக்கு அந்த பூ மாதிரி தான் காதல். ஒரு தடவ உதிர்ந்தால், அவ்வளவுதான். மறுபடியும் மறுபடியும் அதை ஒட்டவைக்க முடியாது” என கூறுவார். அந்த வசனத்தையே வாரிசு படத்தில் யோகிபாபு பேச, அதற்கு விஜய் கவுண்ட்டர் கொடுக்கிறார்.
Also Read | ஓடிடி சார்ட்டில் நம்பர் 1-ஆ? .. போனி கபூர் மகள் நடித்த ‘மிலி’ திரைப்படம்.! Janhvi Kapoor