இசைஞானி- விஜய் ஆண்டனி கூட்டணி - இசைவெளியீடு எப்போண்ணு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், ரவிகிருஷ்ணா நடித்த ’சுக்ரன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து ’டிஷ்யூம்’, ’நான் அவன் இல்லை’ போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்த அவருக்கு ’காதலில் விழுந்தேன்’ படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

Vijay Antony's Thamilarasan movie songs composed by Ilayaraja is to be released soon

இசையமைப்பாளராக இருந்த அவர் 2012ம் ஆண்டு வெளியான ’நான்’ படம் மூலம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இத்துடன் இசையமைப்பதையும் படங்கள் தயாரிப்பதையும் தொடர்ந்து செய்த விஜய் ஆண்டனி சமீபத்தில் நவீன் இயக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கையும் இன்றுடன் முடித்துள்ளார்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும்  இப்படத்துக்கு தமிழரசன் என்று பெயர் சூட்டியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் இசை வரும் டிச. 29 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Antony's Thamilarasan movie songs composed by Ilayaraja is to be released soon

People looking for online information on Ilayaraja, Thamilarasan, Vijay Antony will find this news story useful.