Udanprape others
www.garudavega.com

‘ஜீவி’ பட நாயகன் வெற்றியின் அடுத்த படம்.. விஜய் ஆண்டனி வெளியிட்ட டைட்டில் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவி, 8 தோட்டாக்கள் படங்களின் நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘ரெட் சேன்டில்’. இந்த படத்தில் நாயகியாக தியா மயூரி நடிக்கிறார்.

vijay antony releases jiivi actor vetri next movie title look

இந்த படத்தில் வில்லனாக பிரபல ‘கே.ஜி.எஃப்’, ‘சுல்தான்’ புகழ் நடிகர் கருடா ராம் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

vijay antony releases jiivi actor vetri next movie title look

‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து இயக்குநர் குரு ராமானுஜம் கூறும்போது, “இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015 ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு.

jiivi

உண்மையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இத்தொழிலில் ஈடுபட வைக்கப் படுகிறார்கள். இந்த கதை ரேணிக்குண்டாவில் நடக்கிறது. செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை  வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷீயல் அம்சங்களோடு உருவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

வனப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் காட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்து மிருகங்களின் ஓசையையும் ஒளிப்பதிவாளர், சுரேஷ் பாலா நுட்பமாக படமாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ‘ஆஸ்கார்’ விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் பணிகளை மேற்கொள்கிறார்.

jiivi

யுகபாரதி பாடல்களை எழுதும், இந்த படம் குறித்து கூறும்போது,  “மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. அப்படி ஒரு வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ரெட் சேன்டில்” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். JN சினிமா நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை  பார்த்தசாரதி தயாரித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antony releases jiivi actor vetri next movie title look

People looking for online information on 8 Thottakkal, Guru ramanujam, Jiivi, Vetri, Vijay Antony will find this news story useful.